யோகாவில் உலக சாதனை படைத்த "யோகா அரவிந்த்" வாழ்க்கை வரலாறு

நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் லக்ஷ்மிநாராயணன் சாந்தி தம்பதியருக்கு செப்டம்பர் மாதம் 2ந்தேதி1999-ல்பிறந்தவர் அரவிந்த் இவரின் புனைப் பெயர் "யோகா அரவிந்த்" இவர் சிறுவயதிலிருந்தே யோகாசனபயிற்சிகளைமேற்கொண்டவர் .
இவர் தன் பள்ளிப்  படிப்பை ஈரோடு மாவட்டம் கொடுமுடி  தாமரை மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தருவாயில் பல யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டவர்
8 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிக் -கும் போது  யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்து மாவட்ட மற்றும் தேசிய அளவிலான யோகாசனம் போட்டிகளில் பங்கேற்று நிறைய தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இப்படி படிப்படியாக முன்னேறி தன்னுடைய 14ஆம் வயதில் முதல் தேசிய யோகா சாம்பியன் ஷிப்பில் பங்கேற்று இந்திய யோகா அணியில் தேர்வு பெற்றார்.

10-ஆம் வகுப்பு படிப்பை முடித்த நேரத்தில் 2016 ஆம் ஆண்டில்முதல் சர்வதேச  உலக யோகா கோப்பை போட்டி இந்தோனேசி 
யாவில் நடைபெற்றது. 

89 நாடுகள் பங்கேற்ற  இந்த சர்வதேச போட்டி யில்  இந்தியாவிற்காக உலக யோகா கோப்பையும் தங்கப் பதக்கமும் பெற்று தந்துள்ளார்.
முதல் தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, ஆசியன் கோப்பை,உலகக் கோப்பை சர்வதேச சாம்பியன்ஷிப் போன்ற பல போட்டிகளிலும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று  இந்தியா  விற்கு தங்கப் பதக்கம், வெள்ளி பதக்கம் ,வெண்கலப்பதக்கம் என6தங்கப் 
பதக்கங்கள் 3 வெள்ளி  பதக்கங்களை பெற்று தந்துள்ளார்.
இதுமட்டுமின்றி மாவட்ட மற்றும் மாநில அளவிலான யோகா போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்
களையும் தேசியஅளவிலான போட்டி யில்14 தங்கப்பதக்கமும் 5 வெள்ளிப் பதக்கங்களும்  பெற்றுள்ளார்.
இந்த சாதனைகள் அனைத்தும் அரவிந்த்  தன்னுடைய  18 வயதில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவரது யோகா சாதனைகளுக்காக தமிழக அரசும்  அங்கீகரித்து பல விருதுகள்  வழங்கியதின் அடிப்ப படையில் வேலூர் நியூ ஜெருசலேம் மருத்துவ கல்லூரியால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
18 வயதில் முனைவர் பட்டம்  பெறும் உலகின் முதல் நபர் அரவிந்தே ஆவார்.

அதன்பின் தமிழ்நாடு யோகா கூட்டமைப் பின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க படுகிறார்.தமிழ் நாட்டின் முதல் முறை யாக முதல் இளைய பொதுச்செயலாளர் என்பவரும் இவரே.

19 வயதில் தென்னிந்திய யோகா  செயலாளராகவும்,20 வயதில் தேசிய யோகா செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அர்விந்தின் கடின உழைப்பால்,(NOBEL WORLD RECORD) நோபல் உலகசாதனைகள் தனியார் லிமிடெட் நிறுவனத்தின் சர்வ 
தேச தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்க படுகிறார்.

இதனால் இவருக்கு  சர்வதேச சிறந்த இளைஞர் விருது 2021-ல் வழங்கப் படுகிறது. இந்த விருது அவரை  மாடலிங் மற்றும் சினிமா துறையில் மிகவும் பிரபலமாக்கியது.

மாடலிங் தொழிலில் முதல் சாதனையாக  சென்னையில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட அர்விந் மிஸ்டர் யூத் ஐகான் விருதை பெறுகிறார்.

இரண்டாவதாக   கோயம்புத்தூர் மாடலிங் போட்டியில் பங்கேற்று 2021 ஆம் ஆண்டின் சிறந்த தோற்றம் என்ற‌ விருதை பெறுகிறார். 
மாடலிங் துறை, சாதனைகள் மூலம்  சினிமா துறையில் நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தது தமிழ் திரைப் படத்தில் (கோலிவுட்) ஹீரோவாக நடித்து வருகிறார்.தற்போது  மூன்று கோலிவுட் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார்.
18 வயது முதல் 20 வயதிற்குள் அவர்  பல பிரச்சனைகளை எதிர்கொண்டு  பல பல சாதனைகள் புரிந்தமைக்கு   மக்கள் "யோகா அரவிந்த் " என்றுபுனைப் பெயரை வழங்கியுள்ளனர்.

2016 முதல் 2021 வரை இவர்  யோகா அரவிந்த் என்றுஅழைக்கப்படுகிறார்
மேலும் இவருக்கு  குமாரபாளையத்தில் அரவிந்த் யோகா மையம் என்ற சொந்த யோகா மையம் உள்ளது.
இவரது யோகா மையத்தில்  பல திறமையான இளைஞர்களை உருவாக்கியதில் , பல மாணவர்கள் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Salem District Collector Brindadevi personally inspected the various development projects during a press tour on 12.11.2024.

Sunita Williams steps out on spacewalk after seven months in orbit

Bomb threat to Tamil Nadu's Erode schools declared hoax