மீலாதுன் நபி: வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயர்மிகு சூழலில் வளர்ந்திருந்தாலும் , வாய்மையுடன் இறுதிவரை தனித்துவம் மிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.
அண்ணல் நபிகளாரின் வழி காட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் மக்களால் அமையப்பெற்ற கழக அரசுக்கும் இருக்கும். உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியர் சமுதாய பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன்”என்றுதெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment