சேலம் மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 200-க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 26/11/2021 அன்று சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தெரிவித்ததாவது.
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 26.11.2021 அன்று சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ் என்ஜினியர்ஸ், வீ டெக்னாலஜி, ஹாட்சன் அக்ரோ புரோடக்ட்ஸ், ட்ரு சாய் ஒர்க்ஸ், நரசுஸ் சாரதி, ரேடிஷன் ஹோட்டல், ராசி சீட்ஷ், ரிலையன்ஸ் ஜியோ இன்போடெக், டாடா ஸ்கை, எல்.ஆர்.என் ஏஜென்சிஸ், ஸ்ரீ ராம் பினான்ஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற் பட்ட முன்னணி தொழில் நிறுவனங் கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.
மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப் பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி க்கான பதிவுகள், மாற்றுத்திறனாளி களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் <https://www.tnprivatejobs.tn.gov.in> என்ற இணையதளத்தில் Candidate Login-ல் User ID, Password உருவாக்கிக் கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP -ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், User ID, Password -ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மன்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதிகள் உள்ளிட்ட கல்வி தகுதிகள் கொண்ட நபர்கள் பங்கேற்கலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைதருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ் கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு (BIO Data) ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 0427-2401750, 94990-55941 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். இம்முகாமிற்கு வருகைதரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment