7எல்லைக் காவலர்களுக்கு ரூ7இலட்சத்திற்கான காசோலை வழங்கிய சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 எல்லைக்காவலர்களுக்கு ரூ.7 இலட்ச த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் வழங்கினார்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 எல்லைக்காவலர்களுக்கு ரூ.7 இலட்ச த்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சி
தலைவர் கார்மேகம் அவர்கள் தலைமையில் இன்று 22/11/2021 நடைபெற்றது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பெற்ற போது தமிழ்நாடு முழுவதும் எல்லைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற 110 தியாகி களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாதம் தோறும் ரூ .6,000/ - ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழக முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் 01/11/2021 அன்று 14 எல்லைப் போராட்ட தியாகி களை பெருமைப்படுத்தும் வகையில் ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலை வழங்கி சிறப்புச் செய்தார்கள். அதன் தொடர் நிகழ்வாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லைக் காவலர்களுக்கு சிறப்பு செய்யப்பெற்று வருகிறது.
ஒவ்வொருவருக்கும் ரூ.1.00 இலட்சத் திற்கான காசோலை வழங்கி இன்றைய தினம் சிறப்பு செய்யப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (மேட்டூர்) வீர் பிரதாப் சிங், சேலம் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி மற்றும்பணியாளர்கள் கலந்து
கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment