இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 17/11/2021அன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), பார்த்திபன் (சேலம்), சேலம் வடக்குசே சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அவர்கள் பேசியதாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கை தமிழர்களின் பல்வேறு பொருளாதார முன்னேற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர்களின் முன்னேற்றதிற்கு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் தனி கவனம் செலுத்தி வந்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமினை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டதோடு அவர்களுக்கென தனி வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தார்கள்.
தற்போது சேலம் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கென 400 வீடுகளை கட்டி தருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்கள்.
இலங்கை தமிழர்களை பற்றி எப்போதும் சிந்திக்கின்ற, உங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்களுக்கு எப்பொழுதும் இந்த அரசும் உதவியாக இருக்கும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் செல்வன்.டேவிட் என்பவர் புதுக்கோட்டையிலிருந்து பள்ளி மாற்றுச்சான்றிதழ் பெறாததால் தனது படிப்பை தொடர முடியவில்லை என்பதை அறிந்து உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்புக்கொண்டு பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான ஆணையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வழங்கினார்கள்.
மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள், சமையல் பாத்திரங்கள், ஆடைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை மற்றும் கூட்டுறவு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7.10 இலட்சம் மதிப்பிலான பயிர்கடன் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர் வெ.ஆலின் சுனேஜா, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், தனி துணை ஆட்சியர் சத்திய பாலகங்காதாரன், கெங்கவல்லி வட்டாட்சியர் முருகையன், வருவாய் வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) சித்ரா, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர்கள் மரிய லொராட்ரா (நாகியம்பட்டி), நாகராஜா (தம்மம்பட்டி), நேசராஜா (செந்தாரப்பட்டி தெற்கு), சுப்ரமணியன் (செந்தாரப்பட்டி வடக்கு) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment