கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள 778 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.652.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி பேரூராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மல்லூர், பனமரத்துப்பட்டி, இடங்கணசாலை, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி ஆகிய பேரூராட்சிக
ளுக்கு ரூ.652.84 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை18/11/2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
சேலம் மாவட்டம்-பூலாம்பட்டி அருகில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் மற்றும் இடங்கணச்சாலை ஆகிய 5 பேரூராட்சிகள், சேலம், வீரபாண்டி மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியங்களைச் சார்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அரசு ஆணை எண்.96 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (குவ1) நாள்.09.09.2020-இன் படி ஒப்புதல் வழங்கப்பட்டு, 5 சிப்பங்களாக பிரிக்கப்
பட்டு பணியானை வழங்கப்பட்டு, 10/02/2021 அன்று முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் தற்போதைய (2021), இடைக்கால (2036) மற்றும் உச்சகட்ட (2051) மக்கள் தொகை முறையே 444386, 523562 மற்றும் 603350 ஆகும்.
மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவரு க்கு 5 பேரூராட்சிகளுக்கு 135 லிட்டர் வீதமும், 778 ஊரக குடியிருப்பு களுக்கு ஊரக பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், நகர்புற ஊரக குடியிருப்பு களுக்கு 70 லிட்டர் வீதமும் இடைக் கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 50.70 மற்றும் 58.32 மில்லியன் லிட்டர்கள் ஆகும்.
இத்திட்டத்தின்படி சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகில் காவிரி ஆற்றில் 19.00 மீட்டர் x 7.25 மீட்டர் அளவுள்ள கிணறு மூலம் இயல்பு நீர் சேகரிக்கப் பட்டு 1118 மி.மீ இரும்பு குழாய்கள் மூலம் நீர் உந்தப்பட்டு கோரணம்பட்டி கிராமம் மற்றும் ஏகாபுரம் கிராமம் ஆகிய இடங்களில் இடைநிலை நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு பின் கல்பாரப்பட்டி 53.32 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் சுத்திகரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட உள்ளது.
இதில் நீர் சேகரிப்பு கிணறு இடை நிலை நீர் உந்து நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் அனைத்து நிலைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 38.00 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு நீர் சேகரிப்பு தொட்டியிலிரு ந்து தன்னோட்டக் குழாய்கள் 285.172 கி.மீ (வரப்பெற்றவை- 166.345 கி.மீ, பதிக்கப்பட்டவை - 42.905 கி. மீ) மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள 77 எண்ணம் 50 எண்ணம் - பணிகள் நடைபெற்று வருகிறது.
தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஏற்கனவே உள்ள 34 எண்ணம் கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் அனுப்பிய சேகரிக்கப்பட்டு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து பயனாளிகளுக்கு 795.418 கி.மீ (வரப்பெற்றவை- 661.806 கி.மீ, பதிக்கப்பட்டவை – 84.823 கி. மீ) நீருந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே அமைந்துள்ள 704 எண்ணம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள 263 எண்ணம் (89 எண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் ஏற்கனவே அமைந்துள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்
படவுள்ள 205.96 கி.மீ (வரப்பெற்றவை- 111.865 கி.மீ) நீளமுள்ள பகிர்மான குழாய்கள் வழியாக இத்திட்டத்தின் பயனாளி களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்
பட்டுள்ளது.
இத்திட்டமானது 8/2022 க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன், தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய தலைமை பொறியாளர்செங்குட்டுவன் நிர்வாக பொறியாளர் செங்கோடன்
மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி முன்னாள் அமைச்சர் செல்வகணபதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment