செயல்படாமல் இருக்கும் அம்மா உணவகத்தை துவக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
செயல்படாமல் இருக்கும் அம்மா உணவகத்தை துவக்கக் கோரி அம்மா உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கானா விலக்கு பகுதியில் உள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை. இங்கு 2016 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அது சார்பான அலுவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிதாக அதிகாரிகள் பொறுப்பேற்றதில் இருந்து அம்மா உணவக த்தில் செலவு செய்வதற்கான பணம் தர மறுப்பதாகவும். இதனால் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் அம்மா உணவகம் செயல்படாமல் உள்ளதா கவும். எனவே அம்மா உணவகத்தை திறந்து உணவகம் செயல்பட வழி வகை செய்ய வேண்டும் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment