விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26/11/2021 வெள்ளிக் கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தகவல்.
சேலம் மாவட்ட நவம்பர் 2021 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்டஅறை எண்.215ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோவிட் 19 விதிமுறை களை பின்பற்றி கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment