சேலம் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26/11/2021அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் மேம்பாட் டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத் துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெரு மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது.
விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களின் உற்பத்தியை உயர்த்திட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து, அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்திட அனைத்து துறை அரசு அலுவலர்களைக் கொண்டு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றது.
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2021) பருவ காலத்தில் சராசரியாக 997.90 மி.மீ மழை ஆகும். இயல்பாக நவம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய மழையளவு 942.10 மி.மீ. நடப்பு ஆண்டு (25.11.2021 வரை) 1,240.20 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இயல்பான அளவை விட அதிகளவு பருவமழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அக்டோபர் 2021 மாதம் வரை 1,74,583.8 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்
பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 124.867 மெட்ரிக்டன்னும்சிறுதானியங்கள்
38.807 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 142.766 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 177.672 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களான யூரியா 20,332 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 6,565 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 7,554 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 15,900 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்களுக்கு 1,56,500.97 எக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 65,458.83 எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயிர் உற்பத்தியில் 49.13 இலட்சம் மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10.864 இலட்சம் மெ.டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உளுந்து, தட்டைப்பயறு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.199 செலுத்தி 30.11.2021 வரையிலும், சோளத்திற்கு ரூ.125 செலுத்தி 15.12.2021 வரையிலும், ராகி மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு முறையே ரூ.140, ரூ.300 செலுத்தி 31.12.2021 வரையிலும் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
விவசாயிகள் அரசின் திட்டங்களை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர் வெ.ஆலின் சுனேஜா அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், துணை இயக்குநர் (தோட்டக்கலை) சத்யா, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் புருசோத்தமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment