சேலம் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதை கண்டறிய திடீராய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர், கிரிலோஷ்குமார் சென்னை தொழிலாளர் ஆணையர் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் ஆகியோரின் உத்தரவின்படியும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுரைப்படியும் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசாமி வழிகாட்டுதலின் படியும் சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் முத்து,
சேலம் ஸ்மைல் திட்ட இயக்குனர் நிர்மலா, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பாரதிநகர், அம்மன்நகர், ராஜ்நகர், வரகூர் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பருத்தி தோட்டங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதை கண்டறிய 27/11/2021 அன்று காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திடீராய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் சமயம் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் பணி புரியவில்லை என்பது தெரியவந்தது. மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து அழைத்து வந்து பருத்தி தோட்டத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 18 வயது நிறைவடையாத 4 வளரிளம் பருவ பெண் தொழிலாளர்களை பணிஇடத்தில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டு சேலம் அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் பணிக்கு அமர்த்தி இருந்த நில உரிமையாளர்கள் மீது The Child and Adolescent Labour (Prohibition and Regulation) act 1986 – சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்ற 18 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட பருத்தி தோட்ட உரிமையாளர்கள் மீதுகடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டது.
Comments
Post a Comment