பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது குண்டாஸ் மேற்கொள்ள உத்தரவு ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தகவல்.
பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று 30/11/2021 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது வெளிகளில் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சூழ்நிலையில் மன உளைச்சலால் பல்வேறு இழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு, புகார் பெட்டி பற்றிய விவரத்தினை மாணவிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்புகார் பெட்டி குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியோர் கொண்ட குழுவால் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
பள்ளிக்கு அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொலைபேசி எண்களை பள்ளி தகவல் பலகையில் காட்சிபடுத்தி மாணவி களிடையே புகார் பெட்டி மற்றும் தொலைபேசி எண்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து 181 என்ற எண்ணிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாணாக்கர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிட அப்பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியையினை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது
மாணாக்கர்கள் எளிதில் இவ்வாசிரியரை தொடர்பு கொண்டு தங்கள்பிரச்சனை களை தெரிவித்தால் உரிய ஆலோசனை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 14417 என்ற எண்ணில் கல்வி தகவல் மையத்தில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையமாக செயல்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில்தொடர்புடையவர் கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளஉத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாநகர காவல் துறை துணை ஆணையர் மாடசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் ஆணையர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment