சேலம் சூரமங்கலத்தில் மழைகால சிறப்பு இலவச பொது மருத்துவமுகாம்

சேலம் சூரமங்கலத்தில் மழைகால சிறப்பு இலவச பொது மருத்துவ
முகாம்
சேலம் சூரமங்கலம் பகுதி தமுமுக,மமக நிர்வாகம் மற்றும் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவமனை இணைந்து நடத்திய மழைகால சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம்  27/11/2021அன்று சனிக்கிழமை நூருல் இஸ்லாம் கல்விச் சங்கத்தில் நடைபெற்றது.
பகுதி தலைவர் அலாவுதீன் பாஷா  அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பகுதி மருத்துவரணி செயலாளர் ஷம்சுதீன் அவர்கள் வரவேற்புரை நடத்தினார்.
இதில் மாவட்ட தலைவர் பக்சூ  மாவட்ட துணை தலைவர் லால் மஸ்ஜீத் முஹம்மது ரபீக் பகுதி தமுமுக செயலாளர் கயர் அலாவுதீன் மமக செயலாளர் சிக்கந்தர்பாஷா பொருளாளர் அப்துல் ஜமீல் அன்வாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தமுமுக மமக மாநில அமைப்பு செயலாளர் ஜைனுலாபூதீன் மேற்கு சரக உதவி ஆணையாளர் நாகராஜ் மற்றும் நூருல் இஸ்லாம் ஜமாத் முத்தவல்லி ஹாரூன் ரசீது ஆகியோர் கலந்து கொண்டு  முகாமை துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக 
 தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதில்
 நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட பொருளாளர் ரபீ, அம்மாபேட்டை பகுதி தலைவர் வெல்டிங் பாபு, அஸ்தம்பட்டி பகுதி தலைவர் ஷேக் முத்தஹர்தீன் கொண்டலாம்பட்டி பகுதி தலைவர் முஹம்மது ஜீலான்,பகுதி துணை செயலாளர்கள் அப்பாஸ்,ஜங்சன் அப்துல்லாஹ்,தொழிற்சங்க ஜாபர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இறுதியாக ஆசாத் நகர் கிளை தலைவர் மௌலவி  அஸ்ரப் அலி யூசூபி் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Lohri is a popular North Indian winter folk festival

National Press Day:Importance, significance and history of the day