சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சர் நேரு
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் 17/11/2021 அன்று நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இம்முகாம் களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி) பார்த்திபன் (சேலம்), சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்திடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இன்றைய தினம் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆத்தூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் தேர்தலுக்கு முன்னாள் வாங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இதற்கென இந்திய ஆட்சிப்பணி சிறப்பு அலுவலரை நியமனம் செய்து தனித்துறையை உருவாக்கியுள்ளார்கள்.
இது தற்போது முதலமைச்சரின் முகவரி துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைமேற்கொண்டுள்ளார்கள்.
அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதும் கூட தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய நடவடிக்கையின் காரணமாக தமிழ் நாட்டில் அதிகளவு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாது காத்து நோய் தொற்றினை குறைத்துள்ளார்கள்.
கிராம அளவில் புதிய பட்டா கோருதல், கூட்டு பட்டாக்களை மாற்றித்தருதல், கூட்டுறவுத் துறையில் உள்ள குறைகளை தீர்க்கவும், கடன் வேண்டியும், வேலைவாய்ப்பு வேண்டுதல் உள்ளிட்ட மனுக்கள் அதிக அளவில் பெறப்பட்டு, அம்மனுக்கள் அனைத் தின் மீதும் சட்ட திட்டங்களுக்குட்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு தீர்வு காணப்படும்.
மேலும், பட்டா வழங்கும்போது உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நீர் வழிப்புறம்போக்கு நிலங்கள், குளத்துக்கரை மற்றும் வரத்து வாய்க் கால் உள்ளிட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் சட்ட திட்டங்களுக் குட்பட்டு பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை என்பது ஓரளவு இல்லாமல் இருக்கும்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்தால் குடிநீர் பற்றாக் குறை உள்ள இடங்களில் பாதுகாப் பான குடிநீர் வழங்குவதற் கான புதிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டு செயல் படுத்தப்படும். முன்னோடி வங்கியின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு தேவையான கடனுதவி கள் வழங்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள நானும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு வருகை புரிந்துள்ளோம். இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற் கொள்ளும் அமைப்பாக மாவட்ட நிர்வாகம் செயல்படும். பொது மக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களை முறையாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிவு செய்து பொதுமக்களுக்கு அரசு நலத் திட்டங்கள் வழங்கப்படும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
முன்னதாக, இம்முகாமில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு வழங்கிய 23 வயதான மாற்றுத் திறனாளி செல்வன் சபரிக்கு உடனடியாக நவீன சக்கர நாற்காலி யினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு வழங்கினார்.
மேலும், கலைஞரின் ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் லத்துவாடி கிராமத்தைத் சேர்ந்த அபிராமி மற்றும் சேட்டு ஆகியோருக்கு இடுபொருட்களாக தென்னங்கன்று களும், தமிழ்நாடு விவசாய நிலங்க ளில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் தலைவாசல் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் மும்முடியான் ஆகியோருக்கு மரக்கன்றுகளையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, கெங்கவல்லி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் அந்தந்த வருவாய் வட்டங்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பொதுமக்களி டமிருந்து கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்.
மேலும், நாகியம்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தம்மம்பட்டி மற்றும் அயோத்தி
யாப்பட்டிணம் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.
இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாம் களில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வம், தனி துணை ஆட்சியர் சத்தியபால கங்காதாரன் வட்டாட்சியர்கள் சுமதி (தலைவாசல்), மாணிக்கம் (ஆத்தூர்) உள்ளிட்டதொடர்புடையஅலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment