சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் ; கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு வருகின்ற 04-12-2022 அன்று எழுத்துத் தேர்வு
மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தகவல்.சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிட ங்களுக்கு வருகின்ற 04-12-2022 அன்று எழுத்துத் தேர்வு நடை பெறவுள்ளது.
சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 04.12.2022 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம தெரிவித்துள்ளதாவது:
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண் / மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அதன் மூலம் அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணைய தள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Comments
Post a Comment