முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு.
ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
வருவாய்துறை மூலம், கண் பார்வை யற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500ரூபாயாக உயர்த்தி வழங்கப் படும் என அறிவித்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் மாற்றுத் திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஜனவரி 1ம் தேதி முதல்1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப் படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது
அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டங்கள் தொடங்கப்படும்.
Comments
Post a Comment