சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இன்றுவெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்ட த்தில்11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 29,60,593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், அவர்கள் வெளியிட்டுத் தகவல்.
சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.01.2023) வெளியிட்டார்.
சேலம் மாவட்டத்தில் 09.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 01.01.2023ம் தேதி யைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 09.11.2022 முதல் கடந்த 08.12.2022 வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 12/11/2022, 13/11/2022, 26/11/2022 மற்றும் 27/11/2022 ஆகிய சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 08/12/2022 வரை படிவங்கள் பெறப்பட்டு அதன் மீது நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 81 கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் கள் 1,11,540 பேரும், பெண்கள்1,17,781 பேரும், இதரர் 7 பேரும் என மொத்தம் 2,29,328 பேரும், 82.ஆத்தூர்(தனி) சட்ட மன்ற தொகுதியில் ஆண்கள் 1,15,524 பேரும், பெண்கள் 1,22,744 பேரும், இதரர் 17 பேரும் என மொத்தம் 2,38,285 பேரும்,
83.ஏற்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,37,598 பேரும், பெண்கள் 1,43,430 பேரும், இதரர் 15 பேரும் என மொத்தம் 2,81,043 பேரும்,84. ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,49,576 பேரும், பெண்கள் 1,42,102 பேரும், இதரர் 9 பேரும் என மொத்தம் 2,91,687 பேரும், 85. மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,38,534 பேரும், பெண்கள் 1,34,977 பேரும், இதரர்15பேரும் என மொத்தம் 2,73,526 பேரும்,
86. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,43,615 பேரும், பெண்கள் 1,39,355 பேரும், இதரர் 22 பேரும் என மொத்தம் 2,82,992 பேரும்,
87.சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,35,482 பேரும், பெண்கள் 1,32,707 பேரும், இதரர் 23 பேரும் என மொத்தம் 2,68,212 பேரும்,
88.சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,48,498 பேரும், பெண்கள் 1,49,516 பேரும், இதரர் 62 பேரும் என மொத்தம் 2,98,076 பேரும்,
89.சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,35,144 பேரும், பெண்கள் 1,41,867 பேரும், இதரர் 35 பேரும் என மொத்தம் 2,77,046 பேரும்,
90. சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,27,387 பேரும், பெண்கள் 1,33,640 பேரும், இதரர் 48 பேரும் என மொத்தம் 2,61,075 பேரும்,
91. வீரபாண்டி சட்டமன்ற தொகு -தியில் ஆண்கள் 1,30,126 பேரும், பெண்கள் 1,29,175 பேரும், இதரர் 22 பேரும் என மொத்தம் 2,59,323 பேரும் ஆக மொத்தம் தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள11தொகுதிகளு க்கான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் ஆக மொத்தம் 29,60,593 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப் பட்டும்67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங் கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில்விண்ணப்பப்படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் ஸகோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர்தேர்தல்கள் சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment