திருப்பூரில் தமுமுகவினர் இறந்து போன தங்கம்மாள் என்னும் அன்பு தாயாருக்கு இறுதி கடமைகளை செய்து அடக்கம் செய்தனர்
ஆதரவற்ற நிலையில் இறந்து போன தங்கம்மாள் என்னும் அன்பு தாயாருக்கு இறுதி கடமைகளை செய்து அடக்கம் செய்த தமுமுக வினர்...
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூத்தம்பாளையம் பகுதியைச் சார்ந்த சுமார் 80வயதுள்ள தங்கம்மாள் உடல் நலக்குறைவால் நேற்று அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கான இறுதி கடமைகளைச் செய்ய யாரும் இல்லாத நிலையில் அவர்களது அண்டை வீட்டார் தமுமுகவைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ,தமுமுகவின் மாவட்ட தலைவர் நசிர்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் நாசர் MTS மாவட்ட செயலாளர் காஜா உசேன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேட் ஆகியோர் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று அவர்களது முறைப் படி ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
Comments
Post a Comment