பக்ரீத் 2023: நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு அழகிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
இந்த நாளில் இஸ்லாமிய பெருமக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புக்களையும், வாழ்த்துக் களையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.பக்ரீத் பண்டிகை அன்று குர்பானி கொடுத்து, சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாமியர்களின் கடமையாக திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நாளில் புனித மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பல வற்றில் பக்ரீத் பண்டிகை ஜூன் 28 ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஜூன் 29 ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இப்ராஹீம் அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, போற்றும் திருநாளே பக்ரீத் பண்டிகையாகும். கருணை, தியாகம், இரக்கம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உணர்த்துவதே ஈகை திருநாளின் முக்கிய நோக்கமாகும்.
பிறை தெரிவதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுவதால் பல நாடுகளில் பக்ரீத் கொண்டாடப் படும் தேதியும், நேரமும் மாறுபடுகிறது.
Comments
Post a Comment