தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தல்
நுகர்வோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு - கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப் பதை நிறுத்துவதாக மின்வாரியம் அறிவிப்புநுகர்வோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், கூடுதல் மின்நுகர்வுக் கான டெபாசிட் கட்டணம் வசூலிப் பதை மின்வாரியம் நிறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழிற் சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்கிறது.
இவ்வாறு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்துக்கான கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது.
கூடுதலாக மின்சாரம் பயன்படுத்து வோருக்கு டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படும். இந்த தொகைக்கு மின்வாரியம் 4 சதவீத வட்டி வழங்குகிறது.
டெபாசிட் தொகையைவிட மின்நுகர்வு கட்டணம் அதிகரிக்கும் போது கூடுதலாக இந்த டெபாசிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பது குறித்து அஞ்சல் மூலமாகவோ, பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்வாரியம் தகவல் அனுப்பும்.
ஆனால், தற்போது மின்கட்டணத் துடன் கூடுதல் டெபாசிட் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து மீட்டர் ரீடிங் அட்டையில் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பிடு வது இல்லை. இதனால், நுகர் வோருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, கடந்த 2 மாதங்களில் கோடை வெயில் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி ஆகியவை அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோருக்கு வழக்கத்தைவிட இந்த மாதம் கூடுதலாக மின்கட்டணம் வந்துள்ளது.
இந்த சூழலில், கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் நுகர்வோருக்கு கடும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது வீட்டுக்கான மின்கட்டணம் ரூ.4 ஆயிரத்தை செலுத்த சென்றுள்ளார். அவரிடம், மின்கட்டணம் ரூ.5 ஆயிரம், டெபாசிட் கட்டணம் ரூ.12,500 என மொத்தம் ரூ.17,500 செலுத்துமாறு அங்கிருந்த ஊழியர் கூறியுள்ளார்.
இதற்கு அந்த பெண் கடும் கண்டனம் தெரிவித்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுதவிர, மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு மின்நுகர்வோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சமூக வலை தளங்களில் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ''கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு மின்நுகர்வோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என முதல்வரும் அறிவுறுத்தி உள்ளார். எனவே, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை, அடுத்த பில்லில் கழிக்கப்படும்'' என்றனர்.
Comments
Post a Comment