கூடியது சிறப்பு சட்டமன்ற கூட்டம்.
கூடியது சிறப்பு சட்டமன்ற கூட்டம்.
தமிழ்நாடு சட்டசபை சிறப்புக்கூட்டம் தொடங்கியது மறைந்த உறுப்பினர்களுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்
மறைந்த தியாகி சங்கரய்யா மற்றும் மறைந்த பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார் சபாநாயகர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம் என்றும்
இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்
விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம்.
ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் குறிப்பிட்டுள்ளார்
சில இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஜனநாயகத்திற்காகவும் அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற் காகவும் இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க ஸ்டாலின் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment