மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு

சேலம், தம்மம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  பிருந்தாதேவி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியில்  (25.02.2024) அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி கொடியசை -த்து தொடங்கி வைத்தார்கள். 

இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனைமேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாது காப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும்வகையில்ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும்மாடுபிடிவீரர்கள்காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடிவீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் சண்முகம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Comments

Popular posts from this blog

Salem District Collector Brindadevi personally inspected the various development projects during a press tour on 12.11.2024.

Sunita Williams steps out on spacewalk after seven months in orbit

Bomb threat to Tamil Nadu's Erode schools declared hoax