வெற்றிக்கதை(சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடப்பாண்டில் 1,41,833 விவசாயிகள் ரூ.1,105.38 கோடி கடனுதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடப்பாண்டில் 1,41,833 விவசாயிகள் ரூ.1,105.38 கோடி கடனுதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
விவசாயிகள் நலன்காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி என்றென்றும் தொடர வேண்டும்.சேலம் மாவட்ட விவசாயிகள் புகழாரம்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே சிறப்பாக வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்கள்.
அதில் ஒன்று விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களின் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி என்ற முக்கிய கோப்பில் கையெழுத்திட்டு, விவசாயிகள் கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் பெற்று பட்ட இன்னல்களைத் துடைத்து விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின்மூலம்செயல்படுத்தப்பட்டு
வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்பிருந்தாதேவி
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 8 பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2023-2024-ஆம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.1,007 கோடியில் தற்பொழுது1,08,454விவசாயிகளுக்கு ரூ.956.65 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கடன் தொகைகள் அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனை விவசாயிகள் உரிய தவணைத் தேதியில் திருப்பி செலுத்தும் பொழுது விவசாயிகள் வட்டி செலுத்தத் தேவையில்லை என்பதும், இதற்குண்டான வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்க ளுக்கு வழங்கி வருவது இத்திட்டத் தின் சிறப்பம்சமாகும்.
நடப்பாண்டு அதிக எண்ணிக்கை யிலான விவசாயிகள் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந் துள்ளனர் என்பது குறிப்பிடத்
தக்கதாகும்.
மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டிற்கு ரூ.246.93 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 33,379 விவசாயிகளுக்கு ரூ.148.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை மூலம் நடப்பாண்டில் 1,08,454 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக
ரூ.956.65 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 33,379 விவசாயிகளுக்கு ரூ.148.73 கோடி கடன் என மொத்தம் இந்த இரண்டு வகையான திட்டங்களின் மூலம் 1,41,833 விவசாயிகளுக்கு ரூ.1,105.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் கடனை முழுவதும் திருப்பி செலுத்து வோருக்கு 7 சதவீத வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்
களுக்கு வழங்கி வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய உறுப்பினர் களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்றுப் பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சேலம் மாவட்டம், வனவாசி பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் தெரிவித்ததாவது:
எனது பெயர் செல்லப்பன், த/பெ. கந்தப்ப கவுண்டர். எனக்கு 61 வயதாகிறது. எங்களுக்குச் சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தினை அணுகினேன். அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலர்கள் கடன் பெறுவதற்கான நடைமுறைகளைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, நான் பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன்.
பிறகு, வேளாண்மைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு கடன் பெற விண்ணப்பம் அளித்தேன். எனது விண்ணப்பத்தினைப் பரிசீலனை செய்த அலுவலர்கள் எனக்கு கடந்த மாதம் ரூ.1,80,000/- கடனுதவி வழங்கினார்கள். இதன்மூலம் எனது விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளேன்.
அறுவடை முடிந்த பின் எனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் குறிப்பிட்ட கடன் தொகையினைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு திருப்பிச் செலுத்துவேன். நான் தற்பொழுது சமுதாயத்தில் யாருடைய உதவியும் இன்றி சுயமாக சம்பாதித்து பொருளாதார ரீதியாக எனது வாழ்வில் மேம்பட்டுள்ளேன்.
என்னைப் போன்ற சிறு, குறு விவசாயிகளின் வேளாண் பயிர் சாகுபடிக்கு வழிவகை செய்து கடனுதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என செல்லப்பன் தெரிவித்தார்.
எனது பெயர் சீனிவாசன். எனக்கு 51 வயதாகிறது. எனக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னசோரகை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். நான் கறவை மாடு வாங்குவதற்காக சின்னசோரகை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மனு அளித்தேன். எனது மனுவைப் பரிசீலனை செய்த அலுவலர்கள் எனக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக கறவை மாடு வாங்குவதற்காக ரூ.47,000/- கடனுதவியாக வழங்கினார்கள். இதன்மூலம் தினமும் 15 லிட்டர் பால் கறக்கும் பசுமாட்டினைவாங்கினேன்.
நான் எனது கால்நடை வளர்ப்பின் மூலம் உற்பத்தி செய்யும் பாலினை தினமும் எனது அருகில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்திற்கு காலை நேரத்தில் தோராயமாக 8 லிட்டர் மற்றும் மாலை நேரத்தில் 7 லிட்டர் என மொத்தம் நாளொன்றிற்கு 15 லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கி வருகிறேன். இதன்மூலம் எனக்கு மாத வருமானமாக ரூ.16,000/- பெற முடிகிறது. கால்நடை வளர்ப்பின் மூலம் எனக்கு கிடைக்கும் வருமான த்தில் மாதம் ரூ.2,600/- கடன் தொகை யினைக் கூட்டுறவுக் கடன் சங்கத் திற்கு திருப்பிச் செலுத்தி வருகிறேன்.
எனது வருமானத்தினால் எங்களுடைய குடும்பத்தின் பொருளாதாரம் மேம்பட்டு, எனது மகன்களின் படிப்புச் செலவிற்கு உதவிகரமாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி என்றென்றும் தொடர வேண்டி எனது குடும்பத்தினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக திகழச் செய்யும் வகையில் வேளாண்மை, சுய தொழில் என அனைத்துத் துறைகளிலும் புதுமையான பல்வேறு திட்டங்களை கால சூழ்நிலைக்கேற்ப அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்குமிணங்க, பல்வேறு தரப்பு மக்களின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
Comments
Post a Comment