மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி தகவல்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர் கள் வருகின்ற 05.03.2024 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறு பான்மையின மக்கள் பிரதிநிதி களையும் 05.03.2024, செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மை யினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
அவ்வமயம் சிறுபான்மையின ருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை யினத்தைச் சார்ந்த பொது மக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற் கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்கள்.
Comments
Post a Comment