தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தமிழ்நாடு மின்சார வாரிய அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) மாநிலத்தின் பல்வேறு பிரிவின் கீழ் மின் கட்டணத்தை திருத்தியுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி இழப்புகளை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மின்சாரம் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவது, அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சார கட்டணங்களில் சுமார் 4.83 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.
0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.
Comments
Post a Comment