மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோ ரின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு

மகாஸ்வேதா,தேவி,பாமா, சுகிர் தராணி போன்ற எழுத்தாளர்கள் பெண்ணியம் குறித்தும் தலித்தியம் குறித்தும் தமது படைப்புகளில் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.

 இவர்களுக்கு பரந்துபட்ட வாசகர்கள் உண்டு. தனது கருத்தியலுக்கு முரண் படும் சிந்தனைகளைபாடத்திட்டத்தில் இருந்துஅப்புறப்படுத்தும்செயலினை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 

இந்த வரிசையில் டெல்லி பல்கலைக் கழகத்தின் பாடநூல்களிலிருந்து இந்த மூன்று எழுத்தாளர்களின் ஆக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.  

வரலாறு,    அறிவியல்,  சமூகவியல், கலை, இலக்கியம், பண்பாடு தொடர் பான வகைமைகளில் தொடர்ந்து தனக்கு ஒவ்வாத கருத்துக்களை ஒன்றிய அரசு நீக்கி வருவதாக செய்திகள் வருகின்றன. 

மேலும் நீக்கப்பட்ட பாடத்திற்கு பதிலாக வலதுசாரி சிந்தனைகளைக் கொண்ட வரலாற்றுத் திரிபுகள் பொதிந்துள்ள பிற்போக்கு சிந்தனை களை பாடத்திட்டத்தில் புகுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

கல்வி புலத்தின் தனித்தன்மை பாது காக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக பாடத்திட்ட குழுக்கள் நடுநிலை யோடு செயல்பட வேண்டும். ஒன்றிய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பல்கலைக்கழகம்அடிபணியக்கூடாது

 நீக்கப்பட்டபாடத்திட்டங்களை டெல்லி பல்கலைக்கழகம்  மீண்டும் சேர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Lohri is a popular North Indian winter folk festival

National Press Day:Importance, significance and history of the day