Why do we need MKS as PM of India?: முதல்வர் ஸ்டாலின் பற்றிய புத்தகம் சென்னையில் வெளியீடு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமர் பதவிக்கு தகுதியானவர், அவர் ஏன் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் வகையில் "Why do we need MKS as PM of India Book" என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சென்னையில் வெளியிடப் பட்டது.
எழுத்தாளர் கதிர் மூலம் எழுதப்பட்டு இருக்கும் இந்த புத்தகம் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை, அவரின் பல்வேறு திட்டங்கள், போராட்டங்கள், திராவிட சித்தாந்தம், திமுகவின் அரசியல் செயல்பாடுகள் என்று பலவற்றை பற்றி பேசுகிறது.
திராவிட கொள்கை, திராவிட தலைவர்கள், சமூக நீதி கொள்கைகள், சமூக நீதி திட்டங்கள், பிற மாநிலங்களில் திராவிட கொள்கைகளின் நீட்சிகள் என்று பல விஷயங்கள் பற்றி மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த புத்தகம் எழுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் இந்த புத்தகம் முதல்வர் மு.க ஸ்டாலினின் புகைப்படத்தை முகப்பு அட்டையில் கொண்டு இருக்கிறது. "We Dravidians" அமைப்பின் 6ம் ஆண்டு கொண்டாடட்டமும் இந்த புத்தக வெளியீட்டு விழாவோடு நேற்று கொண்டாடப்பட்டது.
முதல்வர் மு. க ஸ்டாலினின் அரசியல் குணம் மட்டுமின்றி அவரின் தனிப்பட்ட இயல்புகள், பண்புகள் குறித்தும் "பாசிட்டிவ்" விஷயங்களை இந்த புத்தகம் பேசுகிறது. கட்சியில் அடிமட்டத்தில் இருந்து கட்சி தலைவராக உயர்ந்து பின் முதல்வரானது வரை பல விஷயங்களை இந்த புத்தகம் விளக்கமாக விவரிக்கிறது. திராவிட கொள்கைளும், சமூக நீதி கொள்கைகளும் ஏன் அவசியம் என்பதை பற்றியும் இந்த புத்தகம் விரிவாக பேசி உள்ளது.
இளம் தலைமுறையினர் ஸ்டாலின் குறித்து தெரிந்து கொள்ளவும், வெளிமாநில மக்கள் ஸ்டாலின் குறித்து தெரிந்து கொள்ள வசதியாகவும் இந்த புத்தகம் ஆங்கிலத்தில், அனைத்து விவரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சென்னையில் அண்ணாசாலையில் உள்ள அன்பகத்தில் வெளியிடப்பட்டது.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை தொடங்கி வைத்தார். எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எம் அப்துல்லா, டாக்டர் கனிமொழி, மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன், எழுத்தாளர்கள் அருள் பிரகாசம், ஏ.எஸ் பன்னீர்செல்வன், ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
நிமிர்வு கலையகம் சார்பாக இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பறையிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Comments
Post a Comment