சுதந்திர போராட்ட வீரன் மைசூரின் புலி" என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வரலாறு


திப்பு சுல்தான்  'மைசூரின் புலி" என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு இதே நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார்.
இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
மைசூரின் புலியென அழைக்கப் பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான்  பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின்மரணத்திற்கு பின்னர் மைசூரின் மன்னரானார்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படை களினாலும் தோற்கடிக்கப்பட்டார்.
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சு வார்த்தை கூட நடத்தினார்.

அக்காலத்திலேயே உயர்ரக பயிர்கள், கப்பல் கட்டும் தளம் மற்றும் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத் தினார். 'உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும்" என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து,
கர்ஜனையோடு 'ஆடுகளைப்போல் வாழ்வதை விட, புலியைப் போல் வாழ்ந்து மடியலாம்" என முழங்கிய படியே மரணம் அடைந்தார் திப்பு

தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம்
தேதி மறைந்தார்
திப்புவின் மைசூர் அரசை பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர். 
ஆம் நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். 
அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன்.
ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம் என்று கடிதம் எழுதுகிறார் மார்க் வெஸ் வெல்லேச்லி. 
ஆடுகளை போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப் படுக்கையில் திப்பு முழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Tamil Nadu government orders reduction in prices of M sand, B sand, gravel

Lohri is a popular North Indian winter folk festival