மக்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 10.12.2022 அன்று

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் 10.12.2022 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. 
மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் அவர்கள் தகவல்.
சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 10.12.2022 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது: 

சேலம்மாவட்டத்தில்பொதுவிநியோக 
த்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, டிசம்பர் 2022 மாதம் இரண்டாவது சனிக்கிழமை (10.12.2022) அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவர்த்தி பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.  

இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்,புதியகுடும்ப 
அட்டை / நகல் அட்டை கோரும் மனுக் களை பதிவு செய்தல் ஆகிய சேவை களை வேண்டி முகாமில் கோரிக்கை யினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம்.

 தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறை பாடுகள் குறித்த புகார்களை நுகர் வோர் பாதுகாப்புச் சட்டம்2019-ன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம். 
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Lohri is a popular North Indian winter folk festival

National Press Day:Importance, significance and history of the day