வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 தொடர்பானஆய்வுக் கூட்டம் 


மாவட்ட வாக்காளர் பட்டியல் ஆய்வு பார்வையாளர் ஷோபனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷோபனா தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (04.01.2023) நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் 09.11.2022-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 01.01.2023-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 09.11.2022 முதல் துவங்கப்பட்டு, படிவங்கள் 08.12.2022 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து நாளைய தினம் (05.01.2023) இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2023க்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அனைத்து பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர கத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023-ல் பெறப்பட்ட படிவங் கள் முடிவு செய்தது குறித்தும், புதிய வாக்காளர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது குறித்தும், அதிகப்படியான இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 -ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட அனைத்து ஏற்பாடுகளும் மேற் கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பது குறித்தும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷோபனா அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வருவாய் கோட்டாட்சியர்கள் சரண்யா சௌம்யா, தணிகாஜலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கள் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Lohri is a popular North Indian winter folk festival

National Press Day:Importance, significance and history of the day