ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற ப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களு க்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். 

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

 இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளி நடப்பு செய்தனர். 

இந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த10 சட்ட மசோதாக்க ளும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. 

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Lohri is a popular North Indian winter folk festival

National Press Day:Importance, significance and history of the day